அன்னை வரமளிப்பாள்

அன்னை வரமளிப்பாள்

அன்னையை தொழுதால் கேட்கும் வரம் தருவாள்
ஆயிரம் கண்ணுடையாள் கருணை புரிவாள்
இதயத்தில் அமர்த்தி பக்தியோடு கூப்பிட்டால்
ஈசனின் இடது பாகத்து உமையவள் ஆசியளிப்பாள்
உண்மையுடன் சேவிப்பவர்களுக்கு உயர்வினை தருவாள்
ஊண் உருக வேண்டுவோருக்கு உள் நிறைவை கொடுப்பாள்
எங்கும் நிறைந்த பரம்பொருள் நமக்கு சுக வாழ்வளிப்பாள்
ஏக்கங்கள் அனைத்திற்கும் ஒரு விடிவாய் வந்திடுவாள்
ஐம்புலனையும் அடக்கி அவள்பால் அதை செலுத்திட
ஒன்றாக நின்று உன்னதங்கள் பலவற்றை நமக்களித்து
ஓங்கார ரூபமாகி ஊழ் வினைகளை அகற்றி காத்து
அனைத்தையும் நமக்களிக்கும் அன்னை பராசக்தியவள்

எழுதியவர் : கே என் ராம் (25-Aug-23, 7:42 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 25

மேலே