இறவா வரம்தனை
கண்கள் பேசும் கதைகள் யாவும்
காவியமாய் என் நெஞ்சில் நிறையும்
தென்றல் வீசி கலையும் கூந்தல்
ஓவியமாய் என் கனவில் விரியும்
அசையா உதட்டின் மௌன மொழிகள்
அசைத்துப் போடும் என்னிதய கதவை
பசையாய் வந்து ஒட்டிக் கொண்டு
இசையாய் மீட்டும் என்னுயிரின் பாட்டை..
காதில் ஆடும் ஜிமிக்கி இரண்டும்
காதோடு பேசும் காதல் சுவரங்கள்
காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும்
கோலத்தை மாற்றிடும் இயற்கை வரங்கள்
இலக்கண வரம்புகள் இதற்கு இல்லை
இலக்கிய வரம்புகள் முடிவதும் இல்லை
துலக்கிய குத்து விளக்காய் மின்னும்
அழகியே..அன்பே...ஆருயிரே...
என்னுடன் என்றும் இணைந்தே நீயும்
வந்திட வேண்டும் வாழ்நாள் முழுதும்
பிறந்திட்ட பயனை நானும் அடைந்திட
இறைவா அருள்வாய் இறவா வரம்தனை..!