சிகப்பு விளக்கு
சிகப்பு விளக்கு எரிகையிலே
சிந்தையிலே நில் என்றாகி
அங்குமிங்கும் பார்க்கும் விழிகள்
ஆணைப் பார்த்து கவிழ்ந்துவிட
மாதர் தம்மை பார்த்த நொடி
மயக்கம் கொண்டு சிலையாகி
பச்சை விளக்கு பார்த்தவுடன்
பயணிப்போரில் விலகி நிற்க
சீருடையில் காவலர்கள்
சிறு அருகே வந்துவிட
எருமை மாட்டில் வந்த நானோ
ஏரோபிளேனில் பறந்துவிட்டேன்