சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 42

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 42
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் பிரம்மசக்தி அம்மன் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கயிலாய மலையில் சிவசக்தி உரையாடலை
கந்தன் வண்டு உருவெடுத்து அன்னையின்
கருங்கூந்தலில் மறைந்து விளையாட்டாகக் கேட்க
கந்தன் இருப்பதை ஞானத்தால் உணர

உமையே! உன் கூந்தலில் முருகன் அமர்ந்து
உரையாடலை அறிந்த முருகன் மீனாகவும்
அறிந்திட இடமளித்த சக்தியை ஆதி அரசுனுக்கு
மகளாக மானிடப் பிறவியெடுக்க சாபமிட்டார்

சாபம் எப்போது தீருமென உமையவள்
சிவனிடம் கேட்க நீ பருவ வயதை
அடையும் வேளையில் ஆண்டியாகக் கைப்பிடிப்பேன்
அந்த கணத்தில் விமோசனம் தருவேன்னெ

சிவன் சொன்னதுப் போல் வந்தார்
சக்தியை மணந்து முருகனும் விமோசனம் பெற
சிவனுடன் சக்தி கயிலாய மலையில்
சிவசக்தியாக உடனிருக்கச் சக்தியை தேடி
தேவர்கள் அங்கு வரச் சிவன்
தேவர்களை காண வந்தவர்கள் ஏதேனும்
கொண்டு வந்துள்ளீர்களா என்று வினவ
கயிலையில் இல்லாத பொருளும் உண்டோ என்க

தேவர்களே ! அரிதான கடலிலும் பிறக்கும்
பொன்னேரி மலையை கொண்டு வாருங்கள் என்க
தேவர்கள் விரைந்து திருப்பாற்கடலை கடைய
தேவையற்ற பொருட்கள் கிடைத்தது
தேவைப்படும் பொன்னேரி மலை கிடைக்காததால்

இந்திரன் பிரம்மனிடம் கூற அரளிப்பூவில்
உருவெடுத்து கடலிட பொன்னேரி வந்திட
பொற்குடத்தில் வைத்து கயிலாய செல்கையில்
போற்குடத்தை சண்ட முண்டன் பறிக்க

தேவர்கள் கயிலாயத்தில் சிவனிடம் சொல்ல
எமதர்மனையும் ஆதித்தனையும் அழைத்து
பறித்தப் பொன்னேரியை சண்டமுண்டனிடம்
பெற்று வாருங்கள் என்றுரைக்க
எங்களால் இயலாது என மறுக்க

இறைவா ! நான் செல்கிறேன்னெ சக்தியுரைக்க
புன்னகைத்து ஈசன் சக்திக்கு விடைகொடுக்க
64 அடி சதுரமான 51 அடியில்
வேள்விக்கு குழியமைத்து மரத்தை வெட்டி அடுக்கி
அனலை மூட்ட சிவன் சக்தியை பார்க்க
சக்தியின் அம்சம் சிவனிடம் செல்ல
ஈசன் அதனை நெற்றியில் ஏற்ற
நெற்றிக்கண்ணில் தீப்பொறி உருவாக கப்பறையில் ஏந்திய தீயை பிரம்மன்
வேள்வியில் விட பொங்கி எழுந்தது தீ

பிரம்மன் தனது சக்தியை மெருகேற்றி
கலைமகளின் ரூபமாக வெண்தாமரையும்
மலைமகளின் ரூபமாக செவ்வரளி மாலையும்
மஞ்சளையும் குங்குமத்தையும் மஞ்சனையையும் தீயிலிட

வேள்விக்குண்டத்திலிருந்து பிரம்மராக்கு சக்தி உருவாகி
பிரம்மனால் ஒருங்கிணைத்து உருவாக்கப் பட்ட
சக்தியே பிரம்மராக்கு சக்தியென அழைக்கப்பெற்றாள்

பிரம்மராக்குச் சக்தி சண்ட முண்டன்
ராட்சதனை அழித்தமையால் பிரம்மராட்சசியென போற்றப்பெற்று
சங்கரன்கோவில் தலத்திற்கு வந்தவள்
காந்தாரி பக்கத்தில் அமர்ந்து
சங்கை வருவோர்க்கு அருள்புரிகிறார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Aug-23, 5:38 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 35

மேலே