சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 43

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 43
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் ஈச (சிவ) சக்தி சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனின்றி சக்தி இல்லை
சக்தியின்றி சிவனில்லை
உலகமே சிவசக்தி மயமானது
உமையவளை வணங்கிட
செல்வம் கொழிக்கும்

கயிலாய மலையில் ஈசனுடன் உமையவளும்
கண்டு பாரட்டினர் பிருங்கி முனிவரின்
விகடான நடனத்தை ,மகிழ்வுற்ற முனிவர்
வண்டு உருவெடுத்து அம்பாளை தவிர்த்து
சிவனை மட்டும் வலம் வந்து வணங்கிட
சினமுற்ற அம்பாள் முனிவரை முடமாக்கினார்

சிவபெருமான் பக்தனின் அந்நிலை கண்டு
சிவபக்தாரான முனிவர்க்கு ஊன்றுகோல் வழங்கிட
கோபம் கொண்ட உமையாள்
கயிலாய மலையை விட்டு வெளியேறி

கெளத முனிவரின் ஆசிரமத்தை அடைய
கெளதர் ,அம்பிகையே ! இங்கு வந்ததேனோ வினவ
சிவபெருமானின் பாதி உடம்பை பெறவேண்டும்
சக்தி சொன்னவுடன் புராணங்கள் சாஸ்திரங்களை
ஆராய்ந்து கேதாரேஸ்வர விரதம்
அனுஷ்டிக்கும் முறையை அம்பிகைக்கு எடுத்துரைக்க

21 நாள் கடும் விரதமிருந்து
சிவனைப் பூஜிக்க சிவன் மனமிறங்க
சிவபெருமான் அம்பாள் முன் தோன்ற
ஒரு நாளும் உமைப் பிரியாது வரம் வேண்டுமென
அம்பாள் கூற தந்தேன் என்றார் ஈஸ்வரன்

பிரியாது என்றால் அருகில் இருப்பதல்ல
உடலோடு ஒன்றியதாக உடலை விட்டு
பிரிக்க முடியாத வரத்தைக் கேட்டாள்
பரமன் இடமளித்து அர்த்தனாரீஸ்வரர் ஆனார்

பகவானே நான் இருந்த இவ்விரதத்தைப்
பாரில் பக்தியுடன் யார் செய்தாலும்
வேண்டிய வரம் கிடைத்திட அருளுங்கள் என்றவுடன்
வேண்டுகோளை ஏற்று பகவான் அருள்புரிந்தார்
பகவானின் இடது புறத்தில் இடம்பிடிக்க
பார்வதி மேற்கொண்ட விரதமே
கேதார கெளரி விரதமாகும்

விரதம் கடைப்பிடிப்பிடித்து வேண்டிய வரங்களைப் பெற்றிட வணங்குங்கள்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Aug-23, 5:50 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 18

மேலே