சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 44

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 44
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் குமார (முருகன்) சக்தியின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கெளமாரி என்பது
கெளமாரனாகிய முருகனின் அம்சம்
வீரமிக்கவள் மயிலை
வாகனமாகக் கொண்டு அமர்ந்து
ஆறு முகமும்
பன்னிருக் கரங்களும் கொண்டவள்
சேவல் கொடியுடன்
கை சிவந்திட வரங்களைத் தருபவள்

கண்நோய் அம்மை
கண்டவர்கள் உள்ளத்துடன் வணங்கினால்
தீர்க்கம் தருவாள்
தீராத நோயையும் தீர்த்திடுவாள்

வைகை நதிக்கரையின்
வனத்துக்குள் அசுரனை வெல்லுவதற்கு
சக்தியின் அம்சமான
சக்தி கெளமாரி சிவலிங்கம்
செய்து தவமியற்றி வருவதை
அறிந்த அசுரன்
அம்மா கெளமாரியை தூக்கிச்
செல்ல முயல்வதை
ஞானதிருஷ்டியால் உணர்ந்தக் கெளமாரி
அருகில் இருந்த
அருகம்புல்லை அறுத்து அவனை
நோக்கி வீசினால்
அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து
அசுரனைப் பிளந்தது
பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களை தூவினர்
பூஜித்த சிவலிங்கத்திற்கு திருகண்ணீசுவரர்
எனப் பெயரிட்டாள்

மதுரையை ஆண்ட
மாமன்னர் வீரபாண்டியின் தான்
ஊழ்வினைகளால் இரண்டு கண்களின்
பார்வையை இழந்தவன்
கனவில் தோன்றியச் சிவபெருமான்
வீரபாண்டியில் தவமிருக்கும்
கெளமாரியம்மனை வணங்கிட ஒரு கண்ணும்
கண்ணிசுவரமுடையாரை வணங்கிட
மற்றோர் கண்ணும் குணமாகுமென
சிவபெருமான் சொல்ல
வணங்கி கண்ணின் பார்வைபெற்று
கண்ணிசுவரர்க்கு கற்கோவிலும்
கெளமாரியம்மனுக்கு சிறு கோவிலும்
கட்டி வழிபட்டான்

சங்கரன்கோவில் வந்தக் கெளமாரி
சப்தக் கன்னியர்களில் ஒருவராக
சங்கைத் தலத்தில் அமர்ந்து
சங்கரலிங்கரை வணங்கிட வருபவர்க்கு
சிவந்தக் கரங்கள் மேலும்
சிவந்திட வேண்டிடும் வரங்களை
சிவந்தக் கைகளால் தருகிறாள்.....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (28-Aug-23, 5:32 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 18

மேலே