கண்ணன் குழலோசை
கண்ணனின் இனிய குழலோசை என்காதில்
வந்து விழுந்தது உள்ளம் எல்லாம்
பக்தி பரவசம் ஆனது எண்ணமெல்லாம்
சத்தியமாய் அவனை மட்டுமே நினைத்தது
என்னுள் இறைவன் இருப்பதை நான்
இப்போது உணர்ந்தேன் அறிந்தேனே