சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 45

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 45
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் விஷ்ணு சக்தியின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விஷ்ணுவின் அம்சமாக விளங்குபவள் நாராயணி
விரிந்தத் தாமரையாக கண்கள் கொண்டவள்
சியாமள வர்ணமும் பலமும் உள்ளவள்
சங்கு சக்கரம் அபயம் வரதம் கொண்ட
நான்கு கரங்களும் கருடவாகனமும் கொண்டவள்

வணங்கிடச் சகலச் செளபாக்கியம் தந்திடுவாள்
வெள்ளிக்கிழமை நாராயணிக்கு செந்தூர் குங்குமமிட்டு
விரிந்த மல்லிகைபப் பூ மாலையிட்டு
நெய் வைத்தியமாக சர்க்கரை பொங்கலிட்டு
நெய் தீப விளக்கு ஏற்றி
உண்மையுடன் வழிபட்டால் உன்னதங்கள் பல கிடைக்கும்
உரிய காலத்தில் தாலிப் பாக்கியம்
கிடைக்காத மங்கையர் மஞ்சள் சரடுடன்
மஞ்சள் கிழங்கை இணைத்து அம்பாளுக்கு சூடி
வழிபட்டால் தாலி பாக்கியம் தந்திடுவாள்
குடும்ப ஒற்றுமைக்கு வணங்கிட பலனாளிப்பாள்
வெற்றியிலையில் காசு கட்டி
வேண்டினால் செல்வங்களை அள்ளித் தந்திடுவாள்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தலத்தில்
சப்தகன்னியர் வரிசையில் அமர்ந்து
சங்கரலிங்கரை வணங்கிட வருபவர்க்கு அருள்புரிகிறார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Aug-23, 5:34 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 9

மேலே