தேடும் உள்ளங்கள்

தொடர் ஓட்டத்தில்
ஒரு இடையூறு !
நடக்கையில்
ஓர் சறுக்கல் !
விழவில்லை
அடியேன்
வீழவும் இல்லை !
வழக்கமான ஒன்று
உடல் நலத்தில் ஊறு !

நிலையாய் உழல்கிறது
மனதில் நாளும் எழுத !
வரிசையில் நிற்கிறது
வார்த்தைகள் வரிகள்
கவிதை வடிக்க !
சொற்கள் அணிவகுப்பு
சிந்திக்க வைக்கிறது !

இலக்கியம் இல்லை
இலக்கணம் இல்லை
என் கவிதைகளில் !
நோக்கம் ஒன்று
நெஞ்சில் என்றும் !
வாசிப்பவர் புரிதலே !

கருத்துக்கள்
வேறுபடலாம்
என் உள்ளத்தின்
எதிரொலியே
என் கவிதைகள் !

தேடும் உள்ளங்களே
எனது ஓட்டம்
தொடருமென
நம்பிக்கையுடன் ,

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Aug-23, 6:34 am)
Tanglish : thedum ullangal
பார்வை : 175

மேலே