சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 46

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 46
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் வராகி சக்தியின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வராகி அம்மனே போற்றி போற்றி
வரம்யாவும் தருபவளே போற்றி போற்றி

சப்தகன்னியரில் மாறுப் பெற்றவள் வராகி
சரீரம் மனிதனகாவும் வராகமெனும் பன்றி முகமும்
இரு கரங்களில் வரத அபயஹஸ்த்துடன்
சூலம் கபாலம் உலக்கை நாகமென
நான்கு கரங்களில் கொண்டு நான்கு
கையுடன் கருமை நிற ஆடை உடுத்தி
சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறாள்

வராக மூர்த்திப் பூமியை மீட்க
எடுத்த அவதாரத்தில் உதவியது
இந்த வராகிச் சக்திதான்
பன்றி இயல்பில் பூமியே
பார்த்து நடக்கும் பிராணி
வானை நோக்கும் சக்தி
வாரகிபன்றிக்கு இயல்பிலே கிடையாது

வராஹ அவதாரமோப் பெருமாளுக்கு
வற்றாத கடலில் இருந்து
பூமியை மீட்டு மூக்கினால்
பூமியை தூக்காக தூக்கி
தலையை உயர்த்தி வைக்கவேண்டும்
அவதார உருவத்தால் இயலாது அந்த
உந்தலுக்கு உதவியவளே வராகி

உந்தலுக்கு உதவியதால் வராகியை வழிபட்டால்
உயர்வை தந்திடுவாள் கலப்பை கொண்ட கரத்தால்
தூய்மையுடனும் சுத்தத்துடனும் காமம் சிறிதின்றி
தூய உள்ளத்துடன் வழிபட்டால்
சாதரன மனிதனை என்னும் நிலையிலிருந்து
சிகரத்தை தொடும் நிலைக்கு உயர்த்துவாள்

வராகித் தேவ குணமும்
மிருக குணமும் கொண்டவள்
கோபத்தில் உச்சம் கொண்டவள்
அன்பில் இமயமாய் விளங்குபவள்
தவறுக்கான தண்டனையும் பெரிதாக
இருக்க துடியானவள் வராகி
கூப்பிட்ட குரலுக்கு செவி கொடுப்பாள்
வாழ்வின் உந்துதலையும் உயிரின் உந்துதலையும்
அடைந்து எதிரிகளை அன்பால் வெல்லலாம்

வராகியை வழிபடுவோம்
வாழ்வில் ஏற்றம் காண்போம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தலத்தில்
சப்தகன்னியர் வரிசையில் அமர்ந்து
சங்கரலிங்கரை வணங்கிட வருபவர்க்கு அருள்புரிகிறார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Aug-23, 5:38 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 17

மேலே