முடிவு நம் கையில்

கட்டித் தழுவினாள்
உற்க்கமெனும் மங்கை
விழிகளை மூடினேன்
விரைந்து வந்தது
ஆழ்ந்த தூக்கமும் !

கனவும் வந்தது
கண நேரத்தில்
விரிந்த உலகம்
பரந்த நிலங்கள்
பசுமை வயல்கள்
நிறைந்து இருந்தது
நீர் நிலைகள் எங்கும் !

உலவிடும் மக்கள்
உற்சாகப் பெருக்குடன்
கோவில்களில் கூட்டம்
வரிசையில் நிற்கிறார்கள்
கிறித்தவர் இஸ்லாமியர்
உள்ளம் மகிழ்ச்சியானது !

மசூதிகளில் மக்கள் அலை
உள்ளே இந்துக்கள் கிறித்தவர்
மாதா கோவில்கள் நிரம்பின
இஸ்லாமியர் இந்துக்கள்
எங்கும் மதசார்பின்மை !!!

கண்டேன் வேறொரு காட்சி
கண்கள் குளிர்ந்தது
சாதியற்ற சமுதாயம்
மண்ணில் மலர்ந்திருந்தது !

கொண்டாட நினைத்தவன்
திரும்பினேன் இல்லம்
நுழையும் தறுவாயில்
அள்ளித் தெளித்த நீரால்
மேனியெங்கும் சிலிர்த்திட
திடுக்கிட்டு விழித்தேன் !

தூக்கம் கலைந்திட
கனவும் கரைந்தது !
வலித்தது நெஞ்சம்
கனவில் நடந்தது
நனவில் நிறைவேறுமா !

வழியும் முடிவும்
நம் கையில் மனதில் !!!


பழனி குமார்
29.08.2023

எழுதியவர் : பழனி குமார் (30-Aug-23, 8:03 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : mudivu nam kaiyil
பார்வை : 79

மேலே