சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 47

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 47
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் இந்திர சக்தியின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காலகை மற்றும் புலோமை
உடன்பிறந்த இரட்டை சகோதரிகள்
மூதாதையர் தவப் பயணால்
இனத்தை தன்குடிவழி வந்தப்
பெண்ணால் மட்டுமே அழித்திட
பிற சக்ஆதி எதுவானாலும்
அழிக்கா வரத்தைப் பெற்றனர்

புலோமை வழிவந்த புலோமர்களெனும்
பல்கிப் பெருகிய அரக்க கூட்டம்
இந்திரலோகம் வரை வந்து
இந்திரனை இம்சைப் படுத்த

இந்திரன் இந்திராணியை அழைத்து
இந்திராணியே சச்சியென்றப் பெயரில்
புலோமர்கள் வம்சத்தில் பிறந்திட
பதின் பருவத்தில் உனைக் கைப்பிடிக்க
புலோமர்களை அழித்திட உதவி புரிவாய்யென்றிட

இந்திராணி சம்மதிக்கப் புலோமர் அரசியின்
வயிற்றுக்குள் நீர்க்குமிழாய் நூழைந்து சச்சியாக
பிறந்து பதின் பருவத்தை அடைந்தவுடன்
சச்சியின் துணையுடன் புலோமர்களான அரக்கர்களை
அழித்து இந்திரலோகம் வந்தாள் இந்திராணியாக
ஜெயந்தன் ஜெயந்தி(தெய்வானை) சித்ரகுப்தன்
மூவருக்கும் தாயாகவும் உலகுக்கு அன்னையாகவும் திகழ்கிறார்

இந்திரன் அம்சம் உள்ளவள் இந்திராணி
இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும்
ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள்

கார்மேகத்தின் நிறத்துடன்
கற்பகப்பூக்களை கூந்தலில் சூடி
ஒரு முகமும் நான்கு கரங்களில்
கீழ் இரு கைகளில் வரதம் அபயமுடன்
மேல் இரு கையில் சக்தியை அம்புயுடன்
ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள்
அழுகு ரத்தினக் கீரிடம் அணிந்து
யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள்

இந்திரன் தேவலோகத்து அரசன்
எனவே இவள் அரசி
வணங்கினால் செல்வம் தருவாள்
உபாசித்தால் பதவி தருவாள்
சத்ரு யமபயம் போக்குவாள்
கல்யாணம் ஆகாதவர் வேண்டினால்
வாழ்க்கை துணை தந்திடுவாள்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தலத்தில்
சப்தகன்னியர் வரிசையில் அமர்ந்து
சங்கரலிங்கரை வணங்கிட வருபவர்க்கு அருள்புரிகிறார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (31-Aug-23, 5:30 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 22

மேலே