காற்றுக்கு அஞ்சலி

கோடை வெப்பம்
ஆடை நனைந்தது
தணிக்க நினைத்து
கடற்கரை சென்றேன்
காலார நடந்தேன்
மணற் பரப்பில்
பலவித கடைகள்
நிரம்பி வழிந்தது
மக்கள் கூட்டம்
காற்று தான் இல்லை

எண்ணிப் பார்த்தேன்
ஏங்கித் தவித்தேன்
இப்படி இருக்குமோ ?
காற்றுக்கு வியர்த்து
தற்கொலை முடிவுடன்
கடலில் கரைந்ததோ
அஞ்சலி செலுத்தினேன்
அலைகடலை நோக்கி !


பழனி குமார்
30.08.2023

எழுதியவர் : பழனி குமார் (31-Aug-23, 6:19 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : kaatrukku anjali
பார்வை : 47

மேலே