சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 48

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 48
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் சாமுண்டி சக்தியின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மகிஷா என்ற ஊரில்
மகிஷாசூரன் என்ற அசுர வம்ச
எருமை தலையுடையவன் சிவனை நோக்கி
எள்ளளவும் அசையாது கடும் தவமிருக்க
அவனின் தவத்தை மெச்சிய சிவன்
அசுரனே வேண்டும் வரம் கேள் என்க
அவனோ சாவ வரம் வேண்டும் என்க
ஆண்கள் விலங்குகள் நீர் மூன்றும்
உன் மரணத்தை தீண்ட வரத்தை
உனக்கு தந்தேன் என்று சிவன் வரம் கொடுக்க

வரம் பெற்றவன் மக்களிடம் வரம்பு மீற
வாழ்ந்த தேவர்களும் மக்களும் அச்சம் முற்று
கயிலைக்குச் சென்று தேவர்கள் சிவனிடம் முறையிட
கன்னியர்களே அவனை அழிக்க முடியும்
சிவன் சொல்ல சக்தியிடம் சென்றனர் தேவர்கள்
சக்தியை நோக்கி வணங்கி நடந்ததை கூற

ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை
அவதரித்தால் சாமுண்டியாக மைசூரில்
முப்பெரும் தேவர்களின் ஆசியுடன்
மகிஷாசுரனை வதம் செய்ய
வானத்தில் சூழலும் கார்மேகமாக
கருமை நிற மேனியுடன்
புலித்தோல் உடுத்தி புலியாக பாய்ந்து
பதினெட்டு கரங்களுடன் கோரைப்பற்களுடன் மகிஷாசுரனை
போர் செய்து வதம் செய்து
சூரனை அழித்து பிணத்தின் மீது அமர்ந்தவளை
மக்கள் வணங்கி மைசூரில் அருள்புரிய
மக்கள் வேண்டிட சாமுண்டீஸ்வரியாக
சாமுண்டி மலையிலே தங்கி அருள்புரியும் சாமுண்டி அம்மன்
சங்கரன்கோவில் வந்தவள் சங்கரநாராயணர் தலத்தில்
சப்தகன்னியர் வரிசையில் அமர்ந்து
சங்கரலிங்கரை வணங்கிட வருபவர்க்கு அருள்புரிகிறார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (1-Sep-23, 5:32 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 28

மேலே