சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 49

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 49
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் சண்டிகேசுவரர் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சண்டிகேசுவரர் சைவ பஞ்சமூர்த்திகளில் ஒருவர்
சிவபெருமான் உணவு உடைகளுக்கு அதிபதி

சிவன் மீது பக்தி கொண்ட
சிவனடியர் விசாரசருமர்
இடையச் சிறுவன்
பசுக்களைத் தாக்கியதை
பார்த்து வெகுண்ட
விசாரசருமர் சிறுவனுக்கு
விடுப்பு கொடுத்து
பசுக்களை அவரே
புஞ்சைகளில் மேய்த்தவர்

மாடுகளில் பால் கரந்து
மணலில் சிவலிங்கம் அமைத்து
பாலால் அபிஷேகம் செய்துவர இது
பசுக்களின் உரிமையாளர்க்கு தெரியவர

விசாரசருமரின் தந்தைக்குச் செய்தி செல்ல
விரைந்து வந்தவர் நேரில் பார்க்க
மண்ணில் ஊற்றிப் பாலை வீணாக்குகின்றானே
மடையனென சிவபூஜையை தடுக்க சென்றவர்
தன்னிலை மறந்து விசாரசருமர் வந்திருப்பது
தந்தையென்று அறியாது சினம் கொண்டமையால்
சிவபூஜைக்கு வைத்திருந்த பால்
சிரம் பட்டு சிந்திவிட
சிவனை நிந்த செய்த தந்தை மீது
சினத்துடன் குச்சியை எடுத்து வீச
பக்தியால் மழுவாக மாறி
தந்தையின் காலை துண்டித்து
தொடர்ந்தார் சிவ பூஜையை விசாரசருமர்

இதனை கண்ட சிவபெருமான் அவர்
முன் தோன்றி சண்டகேசுவர பதவிதர
சங்கரன்கோவில் சங்கரநாராயண தலம் வந்து
சங்கரலிங்கர் சன்னதியில் அபிஷேக நீர்விழும்
கோமுகி அருகில் சிறு சன்னதியில்
எப்போதும் தியானத்தில் இருக்கும் சண்டிகேசுவரர்

சங்கரலிங்கர்க்கு படைக்கப்படும் பொருள்கள் யாவும்
சண்டிகேசுவரர் கணக்கில் வைக்கப்படும்
சிவன் சொத்து குலநாசம் என்பர்
சிவாலயத்திலிருந்து எந்த பொருளும் கையில்
வீட்டிற்க்கு எடுத்துச் செல்லவில்லை என்று
தெரிவித்துக்கும் படி இரு கைகளையும் தட்டி
வணங்கும் வழக்கம் சங்கையில் இருக்க

கைதட்டி ஒலித்திட சண்டிகேசுவரரின் தவம்
கலைந்து விடுமென்றும் அமைதியாக
வழங்கிடும் வழக்கமே சரியானது
சண்டிகேசுவரரை வணங்கினால் மன உறுதியும்
சிவாலய தரிசன பலமும் கிட்டும்...

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Sep-23, 6:08 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 12

மேலே