பூக்களைத் தீண்டும் காமம்
பூக்களைத் தீண்டும் காமம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மலரும் பூக்களை
மொட்டிலே அழித்திடும் /
வண்டாக ஊருக்குள்
வக்கிர மனிதர்கள் /
பிஞ்சுக் குழந்தைகளை
பூக்களாகக் கசக்கி/
குப்பையில் கிடத்தும்
கொடுமை அறியாமை /
மங்கையாக பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமாம் /
காமம் படைத்த
கயவர்கள் வாழும் பூமியில்/
பெற்றவளும் பெண்தானே
பெற்றதும் பெண்தானே /
பெண்மையின் மேன்மை
புரியாத மிருகக் கூட்டமே /
கோடாரிக் கம்பினைப் போன்று
கருவறைத் தந்த/
பெற்ற பெண்ணினத்த
பலியாக்குவது சரியோ /
மிருகத்திலிருந்து வந்த
மிருகக் கூட்டம் திருந்தாது /
மின்னலாக எழுந்திடு
மென்மையாக இருந்தது போதும்/
தற்கலைக் கற்று
தரிகெட்டக் கொடுரனைத் தாக்கு /
இடியாக முழங்கிடு
இனி வேண்டாம் /
பூக்களைத் தீண்டும்
காமம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்