அவளருகே இருநாழிகை...!

சூத்திரம் கற்றவளுக்கு கோத்திரம் தேவையில்லை
பாத்திரம் கதைக்கேற்ப பக்குவம்தான் போதவில்லை...!

வாதாடி வெல்லும் வாயாடி அவளருகே
போதாயனர் தேற்றத்தின் கர்ணமாய்ச் சரிந்தேனே...!

கணநேர விழியசைவில் கனத்திருந்த ஒருபொழுதில்
மணக்கோல மங்கைபோல் மனந்துளைத்த மாயமென்ன...?

துறவுநிலை துய்த்திடவே தூவானம் துரத்திடவே
தூதாக வந்தவளோ! துதிபாடச் செய்பவளோ...!

நாள்வரை பொறுத்தேனே நான்மறை மறந்தேனே!,
தாளிடைமீளா கவிமுடக்க வாள்முனை வீழ்வேனோ...!

#அவளருகே_இருநாழிகை

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (28-Aug-23, 4:25 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

மேலே