திருநங்கைச் சகோதரிகளே மோற்றுவோம்

திருநங்கைச் சகோதரிகளே மோற்றுவோம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

பிரம்மன் படைப்பில்
ஈஸ்வரன் அவதாரம்/
ஈயின் சிறகாக
இறக்கம் உள்ளவர்/2

யாசகம் பெருவார்
ஈகை செய்வார்/
கூடி வாழ்வார்
கூத்தாண்டவரை வணங்குவார்/4

கதைகளைக் கூறி
கரகாட்டம் ஆடிடுவார்/
கேட்போர் மனதின்
கவலைகளை போக்கிடுவார்/6

நாகரிக மற்ற
நயவஞ்சக உதடுகளின்/
நையாண்டி பேச்சுக்களை
நகைச்சுவையாக ஏற்றிடுவார்/8

சிவனும் பார்வதியும்
சரீரத்தால் இணைந்த/
சிலைகளை வணங்கிடுவோர்
சிந்தித்து பாருங்களே/10

அம்மையப்பன் உருவில்
அவதரித்தவர்யென உணருங்கள்/
யானையை கண்டால்
விநாயகர்யென வணங்குவதாக/12

நங்கையரை கண்டால்
நக்கல் உரைக்காதீர்/
நலம்வாழ குலம்வாழ
நங்கையரை வணங்குங்கள்/14

பிரம்மன் சேட்டையில்
ஆடவர் மேனியும்/
பெண்டிர் குணமுமாக
உடம்பால் இணைத்து/16

கருவில் உருவாகி
குழந்தையாகப் பிறந்து/
கதிராக வளர்ந்து
கலைபலக் கற்ற/18

திருநங்கையும் திறம்பட
திருநாட்டைக் காத்திடுவார்/
திருத்துங்கள் ஒதுக்கீட்டை
தந்திடுங்கள் அரசுப்பணி/20

எப்படி பிறந்திருக்கலாம்
இப்படி இருக்கின்றோமை/
தாழாது உயருங்கள்
திருநங்கை சகோதரிகளே/22

இறைவன் படைப்பில்
குறை இருக்காலம்/
உள்ளத்து குறையுடன்
ஒதுக்காதீர் திருநங்கைகளை/24

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Aug-23, 5:42 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 65

மேலே