தாமரையாள் பேரழகே

கலிவிருத்தம்


வெய்யன் விரிபத்ம வெண்பனி நீக்கழகு
பொய்கை மொட்டவிழ புண்டரி அலர்வேளை
மொய்க்கு தேன்வண்டு முண்டகஞ் சூழ்ந்திடும்
செய்ய வள்மேனி சிரஞ்சூட பேரழகே

தாமரை தடாகத்தில் மொட்டுகள் மலரும் விடியர் காலை வேளையில்
செங்கதிரின் உதய வெப்பத்தினால் பனிவிலக தாமரை மலர்தல் அழ்காம்
மலர் மலர வாசம் எப்படியோ கண்டறிந்த தேன் வண்டுகள் சூழ்ந்ததே
அப்படி அழகாக மலர்ந்த தாமரையை செய்யவள் லட்சுமி திருமேனியிலும்
சிரசிலும் சூட்டிட பேரழகாகுமாம்

எழுதியவர் : பழனி ராஜன் (29-Aug-23, 2:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே