எதிர்வருத லென்பதொரு வினிமையான தேடல் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 3 / தேமா)

எதிர்வருத லென்பதொரு வினிமையான
..தேடல்
கதிர்விளையும் நெல்வயலாய்க் காத்திருத்த
..லின்பம்!
புதிரதனை விடுவிக்கப் புரிந்திடலே
..யென்று
மெதிர்வினையை யாற்றுகின்ற வின்பமென்றே
..சொல்வேன்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Aug-23, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே