மூடிய அழகு

நிர்வாணமாய் அலைந்து திரிந்தான் ஆதிமனிதன்
நிர்வாணமாய் விலங்கோடு விலங்காய் அவன்
அப்போது அவனுக்கு அழகின் இலக்கணம் தெரியாது
பின்னர் இலைகளாலும் அதன் பின்னே
துணியும் கொண்டு மறைத்து பார்க்க
தொடங்க அழகை மெல்ல மெல்ல அவன்
அவள் அழகைக் கண்டு ரசிக்க லானான்
ஜவளி கடையில் அலங்கரிக்கப்பட்ட
பெண்ணின் மாடல் அழகாய் இருக்கும்
நிர்வாணம் விகாரம் அலங்காரம் அழகின் பிரதிபலிப்பு
மூடிய ஆடைக்கு பின்னே அழகின் பரிணாமம்
நிர்வாணத்தில் சிதையும் அழகு
இல்லை மறைவாய் காய் மறைவாய்க்
காணும் அழகே ரசிக்கும் அழகாகும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Aug-23, 10:05 pm)
Tanglish : muutiya alagu
பார்வை : 1327

சிறந்த கவிதைகள்

மேலே