கந்துவட்டி
கந்துவட்டி
○○○○○
பால்ச்சாமி என்பவர் ஊர்ப் பசு மாடுகளில் பாலைக் கறந்து விற்பனை செய்வதுதான் தொழில் குறைந்த வருமானம்.
நிறைந்தப் பிள்ளைச் செல்வமாக 3 பெண், 2 ஆண் வாரிசு
மிகப்பெரிய குடிகாரன் ," மது வீட்டையும் நாட்டையும் கெடுக்கும் "
குப்பியில் எழுதி அரசாங்க விற்க குடிகாரன் " குடி குடியை கெடுக்கும் " என்ற வாசகத்தை படித்து விட்டு விழிப்புணர்வு இல்லாமல் குடித்துவிட்டு குப்புற படுக்கிறான், விற்பனை செய்யும் அரசியல் வாதிகள் பணம் பெருக நிமிர்ந்து நிற்கிறான்.
பால்ச்சாமியின் மூத்த பெண்ணை சொந்தக்கார மாப்பிள்ளை ஆசையாக திருமணம் செய்து கொண்டான் .
இரண்டாவது பையன் திருமணத்தை முடித்தான் வீட்டின் நடுவில் கோடு போட்டு பங்கு போட்டு ஒரு பகுதியில் அவன் தனிக்குடித்தனம் செய்தான்
திருமணம் செய்தவுடன் மகண்கள் வீட்டை பங்கு போட்டு கொள்வதிலும் ,மருமகள்கள் மாமியார் நாத்தனார்களை ஒரு பெண்ணாக பார்த்து தயவுடன் வாழாது, வந்தவுடன் தன் திருவிளையாடலை தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பார்த்து அரங்கேற்றுவதை நிறுத்தினால் மருமகள்கள் வாழ்வார்கள்.
மூன்றாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை
வெளிச் சம்பந்தம் ஏதோ 5 பவுன் நகையும் 10 ஆயிரம் ரூபாயும் வட்டிக்கு கடன் வாங்கி வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை முடித்தான்.
பாலில் தண்ணீரை ஊற்றி சம்பாதித்த காசு தண்ணியாகத்தான் போகும் என்பதற்கெற்ப காசு இருக்கையில் சேமிக்க மறந்து ஆண்டவன் கொடுத்தான் என்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு மறந்து 5 பிள்ளைகள் பெற்றதுடன் இல்லாமல் குடிக்கு பணத்தை செலவிட்டு பெண்ணின் கல்யாணத்திற்கு கடன் வாங்கினான்
அடுத்தடுத்த சோதனையில் சாதனையாக வளர்ந்தது வட்டிக் கடன் குட்டி போட்டு சட்டி ஏந்தும் அளவுக்கு கொண்டு வந்தது .
வீட்டை விற்பனை செய்து கடனை பாதியை அடைத்து வாடகை வீட்டில் குடியேறியவர்கள் வட்டியுடன் வாடகையும் தலையில் ஏற ஐந்தாவது பெண் திருமண வயதை எட்ட
நினைத்து பார்த்தால் பால்ச்சாமியின் தலை எட்டுப் போட்டு எட்டு திசையும் சுத்தியது
வட்டிக்கு பணம் கொடுத்த ரகுவரன் பால்ச்சாமி வீட்டிற்க்கு வந்து பணத்தை கொடு இல்லை விளைந்து நிற்கிற பயிர் ( பயிர் என்றது அவனது மகளை )அனுப்பி வை வட்டியே நீ தர வேண்டாம் என்றான் ரகுவரன்
கோபப்பட்ட பால்ச்சாமி வட்டிக்கடைக் கிழவன் ரகுவரன் கன்னத்தில் பளாரென இரண்டு கொடுக்க ஓடினான் கிழவன்
கடன்சுமை வெள்ளமாக பெருக்கெடுத்து தலைக்கு மேல் ஓட பால்ச்சாமி முடிவுக்கு வந்தான் முடிவை முடித்துக் கொள்ள
பால்ச்சாமி வீடு காலையில் கதவு திறக்கப்படாமல் இருக்க சந்தேத்திட்ட பக்கத்து வீட்டுக்காரன் காவல்துறைக்கு தகவல் சொல்ல விரைந்து வந்து விசாரித்து
வட்டிக்கடை ரகுவரனை கைது செய்ய காவல்துறை விரைந்தது. வீட்டை அடைந்ததும் திறந்த வீட்டிற்குள் நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர் "பாவத்தின் சம்பளம் மரனம்" என்பதை கண்டனர் ரகுவரன் தூக்கில் தொங்க காலடியில் வட்டிக்கு பதிலாக எழுதி வாங்கிய வீட்டு நிலப் பத்திரங்கள், அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டு பாதி எறிந்தும் எறியாமல் கிடந்தது.
ரகுவரன் சாவுக்கான காரணத்தை காவல்துறை விசாரிக்க ஒரே மகன் திருமணம் ஆகதவன் ஆனால் திருமணமாகி இரண்டு குழந்தையின் தாயை அவன் திருமணம் செய்து கொண்டதே காரணம்..
அளவுக்கு மீறிய பணத்தை பாவத்தின் வழியாக சம்பாதிக்க பாவம் ரகுவரனை மரனித்தது .
அளவுக்கு மீறிய குழந்தை செல்வம் ,இறைவன் பணத்தை கொடுத்திடும் போது சேமிக்காது குடித்து அழித்து இறந்த பால்ச்சாமி எல்லைச் சாமியாக நிற்க கந்துவட்டி முற்றும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்

