இமையே தூதுபோ

இமையே தூதுபோ
~~~~~~~~~~~~~

வயதான தாய்தந்தையரை பேணி காத்திட
வாலிபர்களின் மூளைக்கு தூது விடு

மரம் வளர்த்து இயற்கை காற்றை
மண்வாசனையுடன் சுவாசிக்க மூக்குக்கும்

பிறமொழி கலக்காமல் செந்தமிழ்
பேசிட உதடுகளுக்கு தூது விடு

துரித உணவுகளை தவிர்த்து சிறுதானிய
சரிவிகித ஆரோக்கியமான உணவாக சாப்பிடுவதற்க்கு
நாக்கிற்க்கு தூது விடு

மனிதநேயத்துடன் ஏழைகளுக்கு உதவி
மகிழ்ந்திட கைகளுக்கு தூது விடு

காந்தியின் அகிம்சை வழியில் நடந்திட
கால்களுக்கு இமையே தூது விடு...

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Sep-23, 5:28 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 26

மேலே