வினை விதைத்தவன்

வினை விதைத்தவன்
`````````````````````````````````
மனிதன் செய்திட்ட
பாவத்தை போக்கிட
மாவினத்தை உயிர்ப்
பலிக் கொடுத்தான்
மனிதமற்றச் செயலாக
வினை விதைத்த
மனிதனுக்கு விலங்கின்
கொடையாக நோய்கள்

ஆடிய ஆட்டம்
பூமிக்கு பிடிக்கவில்லை
ஆண்டவனும் கைவிட்டான் நுண்கிருமிகளை அனுப்பிவைத்தான்
நிலாவை தொட்ட
மனித இனம்
நேர்கண்ட மனிதனை
கைகுலுக்க முடியவில்லை

மிருகங்களை கூண்டிட்டு
வித்தை காட்டிய
மனிதன் கூண்டோடு
கூண்டிற்குள் சிறையிருந்தோம்
மனிதனே எல்லாவற்றிக்கும்
முதல்வன் என்றிருந்தவனை
எங்கிருந்தோ வந்த
எமனான தோற்று

மனித இனத்திற்கு
கற்றுக் கொடுத்தது
மரனப் பயத்தையும்
மனித நேயத்தையும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (1-Sep-23, 5:35 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vinai vithaitthavan
பார்வை : 94

மேலே