கொற்றவை உதயமாகிறாள்

கொற்றவை உதயமாகிறாள்
×××××××××××××××××××××××××
பூவும் புயலானால்
சிக்குண்டு மாலையாகுமா?
பெண்மையும் கொற்றவையானால்
ஆண்மை திமிருமா?

நிலவாக இருளில்
நித்தம் கரையாதே
கதிரவனாக எழுந்திடு
காமூகனை எரித்திடு

சிற்றோடை நீராகச்
சிறையில் அடங்காதே
சீறும் வெள்ளமாகச்
சீரழித்தவனை சிதைத்திடு

கழுகுக்கு இரையாகும்
கெண்டை மீனாகாது
புலியாகக் கிளம்பிடு
பழிப்போரை பலிதீர்த்திடு

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (31-Aug-23, 7:01 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 230

மேலே