பெண்மை

பெண்மை
×××××××××
தாய்மையால் பூமிக்கு
உயிர்மைத் தருபவள்
வாய்மையால் வெல்லும்
வல்லமைக் கொண்டவள்

எளிமையில் விதையவள்
வலிமையில் ஆலமரமவள்
கூர்மையானப் புத்தியவள்
கூடுமையை அரவணைப்பவள்

கடமையில் கதிரவனவள்
கடுமையில் எரிமலையவள்
கொடுமைகளை வெறுப்பவள்
கொடாமையை ஒழிப்பவள்

சீர்மையில் சிற்பமவள்
சிறுமையை உயர்த்துபவள்
சேய்மையைக் காப்பவள்
சேராமையை உறவாக்குபவள்

துணைமையின் நிழலவள்
தூய்மை உள்ளமவள்
தொன்மையான உறவானவள்
தோழமைக்கு எல்லையற்றவள்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Sep-23, 10:12 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 1302

மேலே