அச்சாணி ஒடிந்த தேர்கள் தெருவோரம்

அச்சாணி ஒடிந்த தேர்கள் தெருவோரம்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

கலங்கப்படுத்தும் உறவுகளில்
கரம்கொடுத்த என்னவளே
காலங்கல் கடந்தும்
கரையோதுங்கிய மீனாக

மணலில் தத்தளிக்கும்
முதிர்ந்த பருவத்திலும்
மணங்கண்ட நாளாக
மனம் பிணைந்து

வாழ்ந்திட்டோம் வாழ்வோம்
வயிற்றுப் பசியோடு
வாரிசுகளுக்கு சோறிட்டோம்
வளந்துவிட்ட பிள்ளைகளும்

பழையது கழிதல்னு
பாதையோரம் தள்ளியே
பாசத்திற்கு வேலியிட்டு
பணத்திற்கு வலையிற்று

தலைமுறையும் தறிகெட்டு
தந்தைத் தாயரை
தான் ஒரு மாதம்
தம்பி ஒரு மாதமென

தாயக்கட்டையாக உருட்டியே
தொடரும் விளையாட்டை
திருவிளையாடல் கண்ட
தெய்வமும் வேடிக்கைப்

பார்த்து மகிழ்கின்றனவோ..

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Sep-23, 5:33 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 136

மேலே