காத்திருக்கிறேன் பெண்ணே

காத்திருக்கிறேன் பெண்ணே - உன் மின்னும் கண்கள் என்னை காணும் வரை
உன் உதடு குவிந்து என் பெயர் சொல்லி அழைக்கும் வரை
பார்த்திருக்கிறேன் பெண்ணே - உன் தோளளவு கூந்தல் தேளாய் கொட்ட
முயல்குட்டி உன் கன்னங்கள் என் நெஞ்சினில் நிறைந்து முட்ட
ஆர்ப்பரிக்கிறேன் பெண்ணே - மிட்டாய் உன்னை கண்ட குழந்தையாய் துடிக்க
மறுத்து நீ கூறிய வார்த்தைகள் நெஞ்சில் குண்டுகளாய் வெடிக்க
தோற்றிருக்கிறேன் பெண்ணே - இதயம் நொறுங்கியது துண்டுகள் பலவாய்
காதல் கரைந்தது குருடன் கண்ட கனவாய்

எழுதியவர் : நிழல்தாசன் (9-Sep-23, 11:02 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : kaathirukiren penne
பார்வை : 518

சிறந்த கவிதைகள்

மேலே