விருத்த மேடை 19 - இரசனை மிக்கதோர் வாழ்வினி லின்பம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

விருத்த மேடை 19
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[வெண்டளை விருத்தம்]
[விருத்தம் நேரசையில் ஆரம்பித்தால் 18 எழுத்துகள்,
நிரையசையில் ஆரம்பித்தால் 19 எழுத்துகள்]
அடியின் ஈற்றுச்சீர் விளமாகும்;
(1, 4 சீர்களில் மோனை)
[இப்பாடலில் விளங்காய் வராது]

இரசனை மிக்கதோர் வாழ்வினி
..லின்பம் பலவாய்ப் பெருகுதே;
கருவிழி போலவே காதலைக்
..காத்திடக் காணுவோ மின்பமே!
பெருநகை வாழ்வினில் பெற்றிடப்
..பேரின்ப மாகுமே வாழ்க்கையும்;
திருவிழாப் போலத் தெரிவுடன்
..தென்றலாய் வாழ்ந்தா லினிமையே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-23, 7:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே