நடராசனைக் கைதொழுவீர் -- கலிவிருத்தம்
நடராசனைக் கைதொழுவீர்
******
( கலிவிருத்தம்)
( மருத்துவர் ஐயா திரு வ.க.கன்னியப்பன்
அவர்களின் வழிகாட்டல் படி)
(வாய்ப்பாடு : புளிமா/கூவிளங்காய் /
புளிமாங்கனி/கூவிளங்காய்
விதியார் ஆர்த்தெழலில் மிதிபட்டுநீ
... சோர்ந்திடாமல்
மதியார் வாசலுளே மனமொன்றியே
... சேர்ந்திடாமல்
பதியார் நந்தியவன் பதமாரவே
... ஓர்ந்துநிற்கும்
நதியார் கூந்தலுடை நடராசனைக்
... கைதொழுவீர் !
******
( 1 மற்றும் 3 ம் சீரில் மோனை)
விளக்கம் :-
விதியார் ஆர்த்தெழலில் : விதிகள் ஆட்சியில்
மதியார் : மதிக்காதார்
பதியார்: கயிலை எனும் பதிதன்னில்
நதியார் : கங்கை எனும் நதி இருக்கும்