பொருளிலாச் சொற்கள் கொண்டு - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
பொருளிலாச் சொற்கள் கொண்டு
..பொய்ம்மையாய்க் கவிகள் செய்தால்
பொருளதும் புரித லாமோ
..போற்றிடும் வகையிற் றானே;
வருணனை வேண்டு மையா
..வகையுடன் செய்திட் டாலே
அரைகுறைப் பொருளை நீக்கி
..அருமையாய்ப் புரிதல் வேண்டும்!
– வ.க.கன்னியப்பன்