நிற்கதியாய் நிற்கின்றோம்
எதார்த்த தீயில் கருகிப் போயின - எங்களின்
ஏக்கங்களும் கனவுகளும்.
கனவுகளில் கட்டின மாட மாளிகைகள் - நனவு
விடியலில் இடிந்து தரைமட்டமாயின
இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.
எங்களின் தாய்தந்தையரின் உதிரங்கள்
தரையில் வீசி எறியப்பட்டன.
சிறுக சிறுக சேர்த்து வைத்த உண்டியலை
ஒரே நாளில்..... ஒரே நொடியில் உடைத்து விட்டு
விழிபிதுங்கி வீதியோரம் நிற்கின்றோம்.
பல உயிர்களை காவு கொடுத்துவிட்டு
பரிதாபமாய் பரிதவித்து நிற்கின்றோம்.
வழிகள் பல எங்கள் முன்னே... ஆனால்
வழிகள் அடைத்து கருவேல முட்புதர்கள்.
வாய்க்கு எட்டாது தூரத்தில் - ஆனால்
முகத்திற்கு முன் தொங்கும்
வாய்ப்புகள் எனும் புற்கட்டுகள்...
புல்லை சுவித்திடலாம் என நம்பிக்கையோடும்
எதிர் பார்ப்புகளோடும்
வேகமாய்...இன்னும் வேகமாய்
ஓடி...ஓடி...கடைசிவரை புல்லை சுவைக்காமல்
உயிரை விடும் அற்ப உயிரினங்கள்.
ஆம்..
" நீட் " எனும் தேர்வால்
மீட்டு எடுத்துவிடலாம் என்றிருந்த
தொலைந்த எங்களின் வாழவை...எதிர்காலத்தை
தொலைத்துவிட்டு நிற்கின்றோம் நிற்கதியாய்…….