ஞானம்
கண்ணாடி முன் நின்றேன்
கற்பனை பிம்பங்களை
காண்பதற்கு
எவ்வளவு முயற்சித்தும்
காண இயலவில்லை
கண்மூடி அமர்ந்து
சிந்தித்தேன்
மனக் கண்ணாடியில்
பிம்பங்களின் நடமாட்டம்
மனக் கண்ணாடியின்
மாயா ஜாலங்கள்
சிந்திப்பவனுக்கே சொந்தம்....!!
சிந்தனையைதான்
"ஞானம்" என்று நாமம் சூட்டி
மகிழ்கிறார்கள்
நாலும் தெரிந்தவர்கள்.....!!
--கோவை சுபா