சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 57

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 57
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் மகிமைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெற்கட்டாஞ்செவலின் மாமன்னர் சிவஞானப் பூலித்தேவர்க்கு
நெடு நாள் வயிற்று வலி
சங்கரன்கோவில் தலப் புற்றுமண் உண்டபின்
சுகமாக திருப்பணிகள் பல செய்தார்

வெள்ளையன் கப்பம் கட்ட வற்புறுத்த
வெகுண்டு எழுந்து எம் மண்ணில்
விளையும் பொருளுக்கு வரி வசூலிக்க
வெள்ளையனே நீ யாரென வீர முழக்கமிட்டு

வெள்ளையனை எதிர்த்த முதல் வீரரான
வடக்காத்தான் பூலித்தேவர் பல போரில் வென்று
வெள்ளையன் பீரங்கிக் குண்டுக்குள் அகப்பட்ட
வெடி மருந்தாக சூழ்ச்சியில் கோட்டையை

வளைத்து பூலித்தேவனை பிடித்து கைதிட்டு
விலங்கிட்டு பாளைக்கு கொண்டு செல்லும்
வழியில் கோமதி அம்பிகையை வணங்கிட
வெள்ளையன் அனுமதியுடன் கோயிலுக்குச் சென்று

வழிபட்டவரை புகை சூழ்ந்து உமையவளிடம்
விளக்கின் சுடராக உருமாறி மறைந்தார்
சங்கரநாராயணர் கோவிலில் ஆதாரமாக
பூலித்தேவர் மறைந்த இடம்
அம்பாளின் சாட்சியாக காட்சி தருகிறது...

அம்பாளின் பக்தன் சோதனையில் சிக்கியவரை
அருவற்ற உருவாக மாற்றிய கோமதியை
அன்பால் வணங்குங்கள் உங்கள் சோதனைகளை
அருளால் இன்பாக மாற்றி அருள்புரிவாள்.....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Sep-23, 12:51 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 9

மேலே