சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 56
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 56
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் வழிபாடு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் பேரொளி
வடிவாக இறைவனை உணர்த்தும் மாவிளக்கு
உலகின் உயிர்கள் அனைத்தும் உண்டு உயிரோடு வாழ ஆதாரம் அன்னம்
அன்னமான அரிசி பிரம்ம ரூபம்
அருஞ்சுவை வெல்லம் என்பது மதுரம்
உயிர்காக்கும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்
நெய்யில் அக்னிபகவான் வசம் செய்திட
ஜோதியாக அம்பாள் மாவிளக்கில் அருள்புரிகிறாள்
நம்மையே விளக்காகவும் மனதை நெய்யாகவும்
நலம்தரும் அன்பை தீபமாக அர்ப்பணித்து
பச்சரிசி மாவில் வெல்லமிட்டு ஏலம்கலந்து
பக்குவமாக உருட்டி வாழையிலையில் பரப்பி
குழி பறித்து நெய் விட்டு
குழியில் திரியிட்டு தீபம் ஏற்றி
கொடிமர முன் பிரதட்சணம் செய்திட
குழந்தை மற்றும் திருமண பாக்கியமும்
பிணியில்ல நல வாழ்வும்
தேகத்தில் வலியிருக்கும் இடத்தில் மாவிளக்கு
ஏற்றி வழிபட்டால் உடனடி நிவாரணம்
தந்திடுவாள் அன்னை கோமதியம்பிகை...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்