சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 55

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 55
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவில் ஸ்படிக லிங்கம் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சைவ ஆகம சாஸ்திரங்களில்
லிங்க வழிபாடேச் சிறப்பு
முப்பத்திரண்டு புனிதப்பொருளால் லிங்கம் உருப்பெறும்
அப்பொருளின்றி இயற்கையாக உருப்பெறும்
ஸ்படிக லிங்கமே சிறந்தது
சிவனின் நெற்றியை அலங்கரிக்கும்
சந்திரனிலிருந்து விழுந்த துகளே ஸ்படிகம்

ஸ்படிகம் கண்ணாடிபோல் மினுமினுக்கும்
மார்கழியாக குளிரும் விலைமதிப்புள்ளது
இமயத்தின் அடியில் கிடைக்கும்

ஆதிசங்கரர் கயிலாயம் செல்கையில்
இடையில் காட்சி தந்த சிவன்
ஐந்து ஸ்படிக லிங்கம் தந்திட
வரலிங்கம் நேபாளத்திலும் மோட்சலிங்கம் சிதம்பரத்திலும்
போகலிங்கம் சிருங்கேரியிலும் யோகலிங்கம் காஞ்சியிலும்
முக்திலிங்கம் கேதார்நாத்திலும் சிவன் அருளியபடி
ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்திட

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தலத்திற்கு
சிருங்கேரி பீடாதிபதி நரசிம்ம பாரதி
தீரத்தர் சிவனுக்கு அபிஷேகம் செய்யாதிருப்பது
நன்றன்று அபிஷேகம் செய்து வணங்கிட
வழங்கிட்ட ஸ்படிக லிங்க
திருமேனியாக வெள்ளிப் பேழையிலுள்ள
திரு சந்திர மெளலீசுவர்க்கே
தினமும் அபிஷேக ஆராதனை நடந்திடும்

சந்திராஷ்டம் காலங்கள் நற்செயலுக்கு உகந்ததல்ல
சிறந்திட்ட காரியங்கள் அந்நாளில் செய்திட
சந்திர மெளலீசுவரரை வணங்கிட தடை நீங்கும்

எதிர்மறை தீய எண்ணங்கள் மறந்து
நேர்மறை தூய உள்ளங்கள் மலர்ந்து
சங்கடங்கள் எல்லாம் விலகிட சங்கை
சந்திர மெளலீசுவரரை வணங்கிடுவோம்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Sep-23, 6:21 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 7

மேலே