எட்டிக்காயும் இனித்திடும்

எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !

எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !

எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!


பழனி குமார்
11.09.2023

எழுதியவர் : பழனி குமார் (11-Sep-23, 8:54 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 36

மேலே