சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 58
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 58
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் : பாகம் 1
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலை முகடு வான் முகில்
தொட முயல்வதும் மேகம் விலகுவதும்
மஞ்சள் பூசிய மங்கையின் மேனியாகச்
சில குன்றுகள்
குங்குமத் திலகமிட்ட நங்கையின் முகமாகச்
சில குன்றுகள்
பளபளக்கும் முத்தானக் கன்னியின் பற்களாகச்
சில குண்டுகள்
பெண்மையின் சலங்கை ஒலியாக மணியொலிக்கும்
சில குண்டுகள்
அத்தனை நிறங்களிலும் வளம் கொண்டு
மலையவள் கருங்கூந்தலில் எருக்கம்பூ தாழம்பூ
புஷ்பங்கள் சூடியதாகப் பூத்துக் குலுங்கி
மேனியில் புள்ளி வைத்துக் கோலமிட்டு
கிளைப் பரப்பும் கொம்பினைக் கொண்ட
பல வகை மான் கூட்டமும்
வானையும் மண்ணையும் இணைத்திடும் மரமும்
மரப்பொந்தில் குடியிருந்து இசைத்திடும் பறவைகளும்
தவழும் தென்றலில் கலந்திடும் மலைச்சாரல்
குளிரூட்டி தாலட்டும் சித்ராகூட மலையில்
இளைப்பாற நிழல் தரும்
பசியாறக் கனி தரும்
உளமாரப் பறவைக்கு உறைவிடம் தரும்
பூக்கள் மலர்ந்திடக் கிளை தரும்
பலா நெல்லித் தினிச இலந்தையென
மரங்களில் கிளை விட்டு கிளை
குதித்து விளையாடும் சோடிக் கின்னார்களும்
மதம் கொண்ட யானையாக மலையும்
நீர் சேமித்த தும்பிக்கையாகயின் முகமாக
மலையில் ஆங்காங்கே விழும் அருவியும்
தந்தம்போல் சிறு நீர் வீழ்ச்சியும்
தேங்கிடும் நீர்நிலைகள் நடுவில் பல
பூக்களைத் தழுவும் தென்றலின் வாசம்
நாசிக்கு விருந்தாகி
குகைகளுக்குள் நுழைந்து வரும் தென்றலின்
நாதம் காதுகளுக்கு விருந்தாகும் கானகனத்தில்
நீயும் உடனிருந்தால் ஆறுவகை காலங்கள்
எத்தனை ஆயினும் கானகத்தில் வாழ்வேன்னெ
அம்பிலிகாட்டி சோறுட்டும் குழந்தையின் அன்னையாக
சீதைக்கு ராமன் சித்ராகூட மலையின்
அழகை கூறி சுற்றி காண்பித்தார்...
சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் பாகம் 2 நாளை....
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்