சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 59

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 59
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் : பாகம் 2
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரிய ஒளி மங்கிடும் கருநிற
மையோ
மரகதத்தின் கரும்பச்சையோ கடலின் கருநீலமோ
கார்முகிலின் கருப்பு நிறமோ ...
அடடா எதிலும் அடக்க முடியவில்லையே, ஐயோ
வடிவத்தில் அழிவில்ல அழகை கொண்டவனும்

இந்திர நீலம் உயர்ந்தக் கல்லைப் போன்ற
இருண்ட நீண்ட தலைமுடிக் கொண்டவன்
நிலவைப்
போன்றப் பிரகாசமான முகமும்
நீண்ட நதியாக இரு கைகளும்
ரத்தின மலையாகத் தோள்கள் உள்ளவனும்

தாமரையை விட்டு நீங்கிய திருமகள்
தவத்தினால் மிதிலையில் சீதையாக பிறந்தவளை
ஆகாயத்தை தொடும் வில்லினை
அவகாசமின்றி தொட்டவுடன் முறித்து
கன்னிச் சிலையானச் சீதையை கைப்பற்றிய ராமனும்

மன்மதனும் ஓவியமாகத் தீட்டக் கூட
இயலாதப் பேரழகு கொண்ட மங்கையவள்
இருந்திடும் வண்ணங்கள் யாவும் அவளைப்
படமாக வரைய இணையாது யென்று

மன்மதன் அமுதத்தை தூரிகையில் தேய்த்து
மங்கையை படமாக்க முயன்று தோற்றான்
அமுதத்தாலும் அப்பேரழகை ஓவியமாக்க இயலாது
போக மன்மதன் திகைத்து நின்ற

தங்கத்தின் பிரகாசம் பூவின் நறுமணம்
தேனின் இனிமையின் சுவையானவள்
செந்தமிழ் சொல்லின் சிறந்தக் கவிதையவள்
செங்காந்தள் மலரின் செவ்விதழ் உடையவள்
ஐயம் நுண் இடையுடையச் சீதையும்

செல்வம் நிறைந்தச் சித்ரகூட மலையின்
சிறப்புகளைக் கண்டு ரசித்தக் களைப்பில்

பாரித் தந்த தேரின் மேலேறி
படர்ந்து இளைப்பாறும் முல்லைக் கொடியாக
கடவுள் போன்ற கொடியிடைக் கொண்ட
சீதையின் மடியிடையில் தலைவைத்து ராமன்
அயந்து இளைப்பாறிய இன்ப தருணத்தில்
இந்திரன் மகன்.......

சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் பாகம் 3 நாளை....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Sep-23, 5:26 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 10

மேலே