பணமே பணமே

பணமே பணமே
பலரையும் உன் பின்னே
வர வைப்பது உன் குணமே
அச்சடிக்கும் முன்னே
நீ வெற்று காகிதமே
அச்சடித்த பின்னே
மாறிடும் உன் குணமே

குணம் மட்டும் மாறுவதில்லை
வெள்ளையென்றும்
கருப்பென்றும்
நிறமும் மாறிடுமே

உன்னை பாராட்டி வரவேற்கும்
ஏழைகளின் வீட்டுக்குள் நீ
செல்ல விரும்புவதில்லை
உன்னை துச்சமென மதிக்கும்
பணக்காரன் வீட்டுக்கு சென்று
அடிமையாக வீழ்ந்து கிடக்கிறாய்

பணமே பணமே
உனக்கு இந்த அடிமை
வாழ்க்கை தேவையா
உந்தன் குணத்தை மாற்றி
எல்லோர் கைகளிலும் செல்லப்பிள்ளையாக
தவழ்ந்து விளையாடு....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Sep-23, 6:04 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paname paname
பார்வை : 140

மேலே