பூவும் பொட்டும்
நாணிட்ட பொட்டு நடுநெற்றி குங்குமமும்
கோணிடா பூத்த நறுமலர் -- காணினன்று
மங்கல மென்றார் மறைந்த துமாறிய
மங்கலஞ் சூழ்பெண்டிர் மன்று
மன்று. = மன்றம்
தாலிப் பொட்டுடன் பெண்டிர் நடு நெற்றியின் குங்குமமுடன்
கூந்தலில் பவித நறுமலர் சூடுதலும் மங்கல மென்பார் அன்று.
இவை அனைத்தும் நீக்கி அமங்கலமாக பெண்டிர் நடு மன்றத்தில்
கைம்பெண் கோலத்தில் வலம் வருகின்றார். மதம் மாறிகள்
நமக்கு வழங்கிய அறிவுரையால் வந்த மாற்றமிது
....