ஆலிலைமேல் துயில் கொண்ட கண்ணன்----கண்ணன் கீதம் 10
ஆலிலைமேல் கண்ணன் (பாமாலை)
பேரொளியாய் ஓருறு, ஓருறுவாய் உருவெடுத்து
பேரொளி சூழ ஆலிலைமேல் வந்தாய்
ஊழி முதல்வனாய் உந்தியில் ஏழுலகும்
பேரெழிலாய்த் தாங்கி கண்ணா.
( கண்ணன் நாராயணன் விஷ்ணு....ஒளிமயமான உருவில்
ப்ரம்மம்....பரப்பிரம்மம்....அவனே தானே சங்கல்பித்து
எடுக்கும் உரு .......ஆலிலைமேல் துயில் கொண்டு வரும்
ஓர் உரு......ஓம்கார நாதம் சூழ .......உந்தியில் ஏழுலகும் தாங்கி)