மனிதன்-இறைவன் ஓர் கவிதை உரையாடல்

மனிதன் : இறைவா , ஏன் உமக்கு உம்மைத் தூற்றுவோர்
மீது சிறிதும் கோபம் வருவதில்லை ?
இந்த தானவர் செருக்கினை கிள்ளி
எறிந்திட ஏன்தான் உமக்கு தயக்கமோ
நான் அறியேனே சொல்வீரா ?

இறைவன் : பக்தன்....என்னைத் தூற்றுவார் மீதோ
என் சிலைகளை சிதைப்பவர் மீதோ
நான் சீற்றம் கொள்வதே இல்லை ...
கோபம் என்பது மனிதரின் உரிமை
என்னை சார்ந்ததல்ல; தேவர்க்கும், இறைவனுக்கும்
இயற்கைக்கும் வருவது சீற்றமே
அறிந்துகொள் நீ ...


மனிதன் : அப்போது இறைவா உமக்கு சீற்றம்
வருவது எப்போதோ ? சொல்வீரா

இறைவன் : என் பக்தனைத் தீண்டும்போது,
அவரைச் சாடும்போது அவர்களைக்
காத்திட சீற்றம் கொள்வேன்...அப்போது
துட்டர்களால் அதைத் தாங்க இயலாது
மாண்டிடுவார் அறி

மனிதன் : இதை நான் இன்னும் காணவில்லையே
கடவுளே. என்றான் நெஞ்சின் அடியிலிருந்து
இறைவன் : கவலைகொள்ளாதே அந்த நாள்
வெகுதூரம் இல்லை ...

மனிதன் : கண்மூடியவன், இப்போது கண் திறந்து
பார்க்க.......இறைவன் காணவில்லை
அவர்க குரலும்

(மனிதன் இப்போது தெம்பாய் நடக்க
தொடங்கினான், நெஞ்சில் பயம் எல்லாம் அகல)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Sep-23, 1:26 am)
பார்வை : 24

மேலே