நல்லவரின் மாண்புகள்
வாழும் காலங்களில்
நல்லவர்களின்
மாண்புகளை
நானிலத்தில்
யாருமே மதிப்பதில்லை
அவர்கள் மாண்ட பின்பு
ஆதாயம் தேடி
புதைத்து விட்ட அவர்களின்
மாண்புகளை புரட்டியெடுத்து
ஏடுகளில் வண்ணங்கள் தீட்டி
பூமாலைகள் சூட்டி
புகழ் கீதங்கள் பாடி
மின்வெட்டு வரும் போது தேடிடும்
மெழுகுவத்தியாக பயன்படுத்தி
தேவை முடிந்ததும்
தூக்கி எறிந்து விடுவார்கள்...!!
--கோவை சுபா