சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 61
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 61
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் : பாகம் 4
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்ரகூட மலையின் மந்தாகினி நதிக்கரையில்
தாயின் இறகில் கீழ் தூங்கிடும்
அன்னைப் பறவையின் குஞ்சுகளை போன்று
நுண் இடையாள் சீதையின் மடியில்
சந்திரனின் பிரகாசமான முகம்கொண்ட ராமன்
அயந்து இளைப்பாறும் வேளையில்
அவ்வழியே வந்த இந்திரனின் மகன் சயந்தன்
சீதையைக் கண்டவுடன் காமம் கொண்டான்
காக்கை உருவில் சீதையினை தீண்டிட
இதையறிந்த ராமன் சயந்தன் மீது
அருகினிலிருந்தப் புல்லினை பறித்து விடுத்திட...
ராமபாணமாக மாறிச் சயந்தனைத்
துரத்த
ரதத்தில் ஏறியவன் உலகத்தைச் சுற்றி
அனைத்து கடவுளிடமும் தஞ்சமடைய முயற்சிக்க
அடைக்கலம் யாரும் கொடுக்க நிலையில்
மும்மூர்த்திகளிடம் சென்று சயந்தன் முறையிட
முறையற்றப் பாவச்செயலை மன்னிக்க இயலாது
என்று உரைக்க வேறு வழியின்றி
எய்த ராமனிடம் திரும்பி வந்து
பாதங்களில் விழுந்து பாவமன்னிப்புக் கோரி
சரண் என்று அடைந்தான் சயந்தன்
எதிரியாக இருந்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும்
குணம் கொண்ட ராமன் மன்னித்து
சயந்தனுக்கு உயிர் பிச்சை கொடுத்து
"நான் மன்னிப்பேன் என் பாணம் மன்னிக்காது "
என்று உரைத்து அண்ணலின் கருணையால்
சயந்தனின் வலது கண்ணை இலக்காக்கி
ஒரு விழியை மட்டும் எடுத்து
உயிர் பிச்சைத் தந்து அருள்புரிந்து
பாவங்களை ராமன் போக்கிட
காக்கை உருவில் அலைந்து திரிந்தான்
இந்திரன் தன் மகன் நிலையறிந்து
சயந்தனிடம் முத்துமாலையை கையில் கொடுத்து
சங்கரன்கோவில் சென்று சங்கரலிங்கரை வேண்டினால்
சுயரூபம் பெறுவாய்யெனத் தந்தை சொல்ல
சயந்தன் சங்கை வந்து நாகசுனையில் நீராடி
சங்கரலிங்கர்க்கு முத்துமாலை அணிவித்து வழிபட
சுயரூபமானத் தேவரூபம் பெற்றான் ...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்