உதவாதினி ஒரு தாமதம்
#உதவாதினி ஒரு தாமதம்
கண்ணைக் கட்டிய உரியடிதானே
காலங் காலமாய் தேர்தல்கள்
வெண்ணைத் திரட்டி
நெய்யு முருக்கி
விட்டார் ஏப்பம் தலைவர்கள்..!
மண்ணைக் கவ்வி மண்ணைக் கவ்வி
மட்டையானார் வேட்பாளர்..!
விண்ணைத் தொட்டபின்
வேர்கள்மிதித்து
வேதனையளித்தார் வாக்காளர்..!
கனிமம் கொழுத்த
மாநிலம்தேடி
காலடி பதித்தார் காவிகள்
இனியென்னத் தாமதம்
எடுகொடுவாளை
இரண்டென வாகட்டும் பாவிகள்..!
ஒன்றாம் நாடு ஒன்றே மொழியாம்
உதவாக் கரைகளின் சூளுரைகள்
நன்றா சொல்வீர் முதல்வ ரழித்து
நரிகள் ஆளவே சூழ்ச்சிகள்..!
கரையான் கூட்டம் காவி யுடையில்
கச்சிதமாக அரிக்குது பார்
நுரையைத் தள்ளி மாளும் முன்னே
நுதலைப் பெயர்ப்போம்
விடியலுக்காய்..!
சாதி வெறியைத் தூண்டித் தூண்டி
சாதிக்க நினைக்கும் பேய்கள் காண்
வாதை செய்யும்
வஞ்சக ரவரை
வாட்டிட இன்னும்
தாமதமேன்..!
தேசம் காப்போம் என்றே கூவி
நாசம் செய்யும் நாட்டாமை
மோசம் போகும் முன்னே பாய்ந்து
அழிக்கத் தேவை கூட்டாமை..!
தேர்தல் களத்தில் குண்டர்கள் இருத்தித்
தேற்றிக் கொள்வார் வாக்குகளை
போர்தான் புரிந்து தடுக்க வேனும்
பொல்லாப் புல்லர் போக்குகளை..!
வரிக்கு மேலே வரிகள் இட்டார்
வாழும் வசதிகள் முதலைக்கே
கரிமதம் பிடித்து
துதிக்கைச் சுழற்று
எரிதழல் இடலாம்
கொள்ளைக்கே..!
தமிழன்தலையைக்
கொணர்வாருக்குக்
கோடிப்பணமாம் தண்டோரா
இமைகள் திறப்பாய்
இனியென்ன தாமதம்
இடியென முழங்கி வாவாவா ..!
தனிமரத்தால் ஆவதென்ன
தன்னலங்கள் தூக்கிஎறி
குனிந்தது போதும்
கூட்டம் கூட்டு
குள்ள நரிகளைத் தாக்கியடி..!
தாமதம் செய்தால்
அடிமைக ளாவோம்
தரித்திர முடைக்கப் படைத்திரட்டு
வேகம் வேண்டும்
புயலாய் வாவா
வீழட்டும் நாட்டில் பொய்ப்புரட்டு..!
#சொ.சாந்தி