யாருமற்றவள்
புதைகுழியில் அமிழும்
அனுபவம் ஆழ்மனதில்
மிரட்டுகிறது.....
மீண்டிடும் முயற்ச்சியில்
போராட்டம் தோல்வியில்
முடிகிறது.....
கட்டுப்பாடு கைநழுவ
கால்தடுக்கி விழுகிறேன்
உறவுகளிடம்....
உறவுகளுக் கிடையே
உற்சாகம் வடிந்து
வாடுகிறேன்....
எண்ணற்ற உறவிடையேவுருத்
தெரியாமல் தடுமாறுகிறேன்
அனாதையாக....
கவிபாரதீ ✍️