கல்லையும் கனியாக்கிய காதலே
கல்லையும் கனியாக்கிய காதலே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மல்லிகைப் பூவென
மகிழ்ச்சியும் மலர்ந்திட /
கல்லையும் கனியாக்கும்
காதலும் பிறந்ததே /
பாலை நிலத்திலே
பீறிட்ட ஊற்றென /
பாவியென் நெஞ்சிலும்
பாய்ந்ததே பாசமே /
கண்டதே காட்சியாய்க்
கொண்டதே கோலமாய் /
உண்டதே அமிழ்தமாய் /
உழல்வதும் வாழ்க்கையோ /
கண்டதும் உள்ளத்தைக்
காதலால் பூட்டியே /
பண்பினால் வாழ்வினைப்
பற்றுதல் விந்தையே /
எண்ணுவது எண்ணியும்
இருப்பது நமக்கென /
மண்ணிலே ஓருயிர்
மாறிடல் விந்தையே /
மானுடன் மாண்பெலாம்
மனைவியின் கையிலே /
ஊனொடும் உயிரொடும்
உறைபவள் தையலே /
பொருளிலா மாந்தர்க்கு
இவ்வுலகு இல்லையே /
பொருளேதும் உள்ளதோ
அன்பில்லா வீட்டிலே /
வீழ்வதும் இல்லையே
வியத்தகு காதலே /
வாழ்வது ஒருமுறை
வாழுவோம் மகிழவே !!
-யாதுமறியான்.