ஆனந்த யாழை மீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் !!
$$$$$$$$$$$$$$

நாணத்தில் விரல்கள்
கோலமிடக் கொஞ்சும் /
பாணனின் பாடல்கள்
பாடுகிறாய் ஆடுகிறாய் /

வான்மழைப் போலவே
கொட்டுகிறாய் அன்பை /
தேன்சுவைக் கலந்தே
ஊற்றுகிறாய்த் தேற்றுகிறாய் /

ஆனந்த யாழினை
மீட்டுகிறாய் என்னில் /
ஏனிந்த பூரிப்பை
ஊட்டுகிறாய் வாட்டுகிறாய் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (22-Sep-23, 8:26 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே