சனம் - தனம்

என்னங்க உங்க பொண்ணுப் பேரை எல்லாரும் வித்தியாசமா கூப்பிட்டறாங்க.

ஆமாங்க. எங்க பொண்ணோட பேரு தனபாக்கியம். நாங்க அவளை "தனம், தனம்"னு கூப்பிடுவோம். எங்க தனத்துக்கு மனிதநேயம் அதிகம். மக்களை மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் நேசிக்கும் பண்பு உள்ளவள்.

எங்க தனம் நம்ம ஊர் சனங்கள் மேலே அளவு கடந்த பாசம் கொண்டவள். எல்லார்கிட்டயும் கூச்சப்படமா பழகுவா; தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்வாள்.

சனங்கள் மேலே அவள் வைத்திருக்கும் அன்பு, பாசம், உதவும் மனப்பான்மை இதெல்லாம் அவள் பேரையே மாத்திருச்சுங்க‌.

என்ன மாற்றங்க?

'தனம்'னு அவளைக் கூப்பிட்டவங்க எல்லாம் அவளை 'சனாதனம்'னு கூப்பிடறாங்க.

புதுமையான பேருங்க. கண்டிப்பா சிந்தாபாத்து சொல்லணும்.‌

எழுதியவர் : (25-Sep-23, 9:30 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே